Breaking

Wednesday

உத்தேச வேட்பாளர் பட்டியல் தயார் நிலையில் ....!


சுவாரஸ்யமாகச் சூடு பிடித்துள்ள எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பின் அம்பாரை மாவட்ட உத்தேச வேட்பாளர் பட்டியல் இவ்வாறு தான் அமையவேண்டிய தேவை இருக்கிறது. முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வினை தலைமை வேட்பாளராக கொண்ட பட்டியலில் இளையதும் பழையதுமென சரிசம விகிதத்தில் பட்டியல் தயார்படுத்தப்படல்
வேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காக இளையவர் பட்டியல் ரகசியமாகப் பேணப்படல் அவசியம்.

ஹக்கீம் காங்கிரஸின் இருப்பை உறுதிப்படுத்த கடந்த காலங்களைப் போலவே மரச்சின்னத்திலும் பெரும்பான்மைக்கட்சிகளின் கூட்டின்றி தனித்தும் களமிறங்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் சாணக்யர் தள்ளப்படும் அதே வேளை சின்னம் மரமன்றி வேறொன்றாக
இருந்தால் இன்னும் சவாலை எதிர்நோக்கவரும் என்பதனை ஹக்கீம்
அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. அதே
வேளை முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பு வெற்றியை உறுதி செய்ய தனித்து அல்லது அரசுடன் இணைந்து போட்டியிடும்.

பொத்துவிலில் ஜனரஞ்சகமான இளரத்தம்
களமிறக்கப்படும் அதே வேளையில் அக்கரைப்பற்று முன்னாள் அமைச்சர்
அதாவுல்லா அணியில் மாகாணசபை உறுப்பினர் உதுமாலெப்பை அட்டாளைச் சேனையிலும் இறக்காமத்தில் மன்சூரும் களம் குதிப்பர்.இதே தருணம் பாலமுனையின் இளம் வேட்பாளர் ரகசியமாகப் பேணப்படும்
அதே நேரம் ஒலுவில் மறைந்த மாமனிதர் மர்ஹூம் அஷ்ரப் ஞாபகார்த்த இல்லத்தில் இருந்த வண்ணம் ஒடுக்கப்பட்ட ஒலுவில் மக்களின் குரலாக அமான் அஷ்ரப் களமாடவிருக்கிறார்.

நிந்தவூரில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹசனலியும் புதியதொரு அறிமுகமும் களம் காணும்.சம்மாந்துறையில் பாராளுமன்றத்
தேர்தலில் மயில் சார்பாக அதிக வாக்குகளைப் பெற்ற உபவேந்தர் இஸ்மாயீலுடன் முன்னாள் தவிசாளர் நெளசாட்டும் வேட்பாளராவார்கள்.
சாய்ந்தமருதில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜெமீலும் முன்னாள் மேயர் சிராஸ் மீராஸாகிபும் கல்முனையில் ஏ.ஆர்.எம் ஜிப்ரியும் தலைவர் றிசாட்
வேண்டுகோளின் பேரில் குதிக்க கல்முனையில் இன்னுமொரு மாகாணசபைக்கான புதுமுகமும் களைகட்டும்.

மருதமுனை , நற்பிட்டிமுனை இருவூரிலும் இரு இள அறிமுகங்களுமாக ஹக்கீம் காங்கிரஸை கதிகலங்கவைக்கும் உச்சபீட உறுப்பினர் பலரும் குறித்த தேர்தலுக்கு முன்பாக வந்து சேர்வார்கள் இன்ஷா அல்லாஹ்.அனல் பறக்கும் விவாதங்களுடன் கூடிய பேச்சுக்களுடன் சாணக்யர் சரித்திரம்
மக்கள் மன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட விருக்கின்றது.

2012 மாகாணசபைத் தேர்தலில் முழு மாகாணத்திலும் ஹக்கீம் காங்கிரஸ் பெற்றுக்கொண்ட 7 ஆசனங்களையும் துவம்சம் செய்து கூட்டமைப்பு வெற்றிக்களை கட்டும். முழுமாகாணத்திலும் அதி கூடிய
ஆசனங்களைப் பெற்று முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பு பேரம் பேசும் சக்தியைக்கொண்டு ஆட்சியின் பிரதான பங்காளியாக மாறி முதலைமைச்சரையும்
கையகப்படுத்தும் இன்ஷா அல்லாஹ்.


Shifaan Bm
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog