Breaking

Sunday

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஜனாதிபதி அறிவுரை...!


உலகுக்கு ஒரு முன்மாதிரியான மாணவ தலைமுறையாக இருக்குமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஜனாதிபதி அறிவுரை கூறியுள்ளார்.

பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பெற்றோர்களினதும், நாட்டினதும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் மனிதாபிமானத்துடனும், சகோதரத்துவத்துடனும் ஒரு சிறந்த மாணவராக தனது கல்வி 

நடவடிக்கைகளில் ஈடுபட்டு, உலகுக்கு ஒரு முன்மாதிரியான மாணவ தலைமுறையாக இருக்குமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர்களிடமும் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எழுச்சி பெறும் பொலன்னறுவை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டாகும் போது பொலன்னறுவை மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளிலும் பௌதீக தேவைகளை நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

நாட்டின் ஏனைய மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நிலவும் பௌதீக வளப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் விசேட நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog