Breaking

Tuesday

இருண்ட பாதை இது


கிழக்கான் அஹமட் மன்சில்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் கட்சியின் சமகாலப் பயணத்தையும்,அக் கட்சியின் தற்கால நிர்வாக கட்டமைப்பு பற்றியும் மறைந்த மா பெரும் அரசியல் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் எழுதிய நான் எனும் நீ கவிதை புத்தகத்தில்  இருக்கும் இந்த கவிதை சரியாக விளக்கி நிற்கிறது.


இந்தப் பாதையில் ஏன் நடந்து செல்கிறோம்
இந்தப் பாதை இருண்டன்றோ கிடக்கிறது.
இந்தப் பாதையால் எங்கு நாம் செல்கிறோம்
இந்தப் பாதையின் இருள் கூடி வருகிறதே.

கற்கள் நிறைந்து கிடக்கிறது
கறடு முரடாய் இருக்கிறது
பற்கள் நிறைய விஷத்தோடு
பாம்புகள் கொல்ல நிற்கிறதே

அண்ணலார் தந்த அடித்தளத்தை விட்டொதுக்கி
எண்ணற்ற வாரெல்லாம் ஏறு நடை போட்டதனால்
முன்னுக்குச் சென்று கோஷங்கள் முழங்கியதால்
கண்ணுக்கு குளிர்ச்சி தரும்
காட்சிகளை செய்ததனால்
பின்னுக்கு வந்த பிரளயத்தில் சிக்குண்டோம்
கண்ணுக்குள் விரல்களினால்
கத்தியால் பின் சென்றோம்

எம்.எச்.எம்.அஷ்ரப்
நான் எனும் நீ
பக்கம் 113
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog