Breaking

Wednesday

நனவாகாத அஷ்ரப்பின் கனவுகள்...!


கிழக்கான் அஹமட் மன்சில்

மறைந்த அரசியல் தலைவர்,மு.கா வின் ஸ்தாபகர் தன் உடல்,பொருளை இழந்து முஸ்லிம் சமூகத்தின் விடியலுக்காய் பெரும்பாடுபட்ட எம்.எச்.எம்.அஷ்ரப் கண்ட கனவுகள் ஒன்றேனும் இதுவரை நனவாக்கப்படாமல் ஆண்டுகள் 16 கடந்து 

விட்டன.கிழக்கிலே பிறந்த ஒரு உண்மைப் போராளியாக கட்சியை வழிநடாத்திய மறைந்த தலைவர் தனது சிறுபராயம் முதல் நுகர்ந்த,தவழ்ந்த கடல் காற்றையும் கடல் மண்ணையும் என்றும் மறந்து விடவில்லை.அஷ்ரப்பின் ஆத்மா இன்னும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.தன்னுடைய கனவுகளை எப்போது நனவாக்கப் போகிறார்கள் எனும் ஆவலுடன்.

மறைந்த தலைவரையும் அவரின் கொள்கைகளையும் மதிக்கின்ற அல்லது விரும்புகின்ற உண்மைப் போராளி தற்போது இருக்கும் மு.கா கட்சியையும் அதன் தலைமைத்துவத்தையும் விரும்பமாட்டான்.மா பெரும் தலைவர் செய்ததில் நக அளவேனும் செய்திருக்கமாட்டாது தற்போதைய தலைமைத்துவம்.நீ உண்மை போராளியாக இருந்தால் இந்த கவிதை வாசிக்கும் போது கண்களில் நீர் வரும்.

நான் எனும் நீ கவிதைப் புத்தகத்தில் இருந்து அவர் கண்ட கனவுகளை தூசி தட்டி ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

கண்களே!கண்களே!திறவாதே!-எங்கள்
கனவுகளை நீ கலையாதே!
கனவும் நினைவானதே!-எங்கள்
நினைவும் நனவானதே!

தங்கத்தை கடைந்தெடுத்த தாழியில்!-இம்
மண்ணை தாலாட்டியது
தென்கிழக்கை தருவதற்கோ!
அல்ஹம்துலில்லாஹ்
தென்கிழக்கின் கடற்கரேயே!

தென்றல் வருவாள் நீ சிரித்தால்தான்
விடைபெறுவாள்!
நீல பச்சைக் கடலினில் நீந்திடுவாள்-அவளை
தேடிவரும் தோணிகற்கு கண்ணடிப்பாள்

வயலெல்லாம் அறுவடைகள்!
வாய்க்காலெல்லாம் நீர் நடனம்!
கடலெல்லாம் முத்துக்கள்!
காற்றெல்லாம் கவிமழைகள்!

தென்னை மரத் தோட்டம்!
தெவிட்டாத பழமரங்கள்!
பூத்துக் குலுங்கும் பூ மரங்கள்!
பார்த்து இசைக்கும் குயிலினங்கள்

கல்லோயா வருவாள் கடலிலே உடல்கழுவ
பலநாட்டுக் கப்பல்கள் பொருளிறக்க போட்டியிடும்
பல்கலை வேந்தர்கள் பகலிரவாய் வலம் வருவர்
வெல்லமெனக் காதில் விழும்
வேத குர்ஆன் ஓதும் ஒலி
கோயில் மணியோசை நெஞ்சை நிறைக்கும்
தேவனருள் தவழ்ந்துவரும் ஆலயங்கள்
தித்திக்கும் தீகவாபி புத்தபிரான் புகழ் பரப்பும்.

எம்.எச்.எம்.அஷ்ரப்
நான் எனும் நீ
பக்கம் 503
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog