Breaking

Friday

ஓ.பி.எஸ் இன்று வெளியிடவிருக்கும் முக்கிய அறிவிப்பு....!சசிகலா தரப்பு கலக்கத்தில்.


தமிழக அரசியலில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய அறிவிப்பை இன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட இருப்பதாக முன்னாள் கல்வி அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஓர் அணியாகவும், சசிகலா மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். ஓ.பன்னீர் செல்வத்தின் மெரினா புரட்சி தமிழக அரசியல் சூழலையே புரட்டிப்போட்டது.

இந்தநிலையில் அவர் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக முன்னாள் கல்வி அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை ஆர்.கே.நகரில் இன்று நடைபெற உள்ள ஜெயலலிதா பிறந்தநாள் கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

மாபா பாண்டியராஜனின் இந்த அறிவிப்பு சசிகலா தரப்பை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜெயலலிதா தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தி மக்களின் ஆதரவை தேடும் நோக்கில் ஓ.பி.எஸ் களமிறங்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனைடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் நேற்று அளித்த பேட்டி ஒன்றில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவில் மர்மம் இருப்பதாகவும், அந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை கட்டாயம் தேவை எனவும் கருத்து தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog