Breaking

Tuesday

இனி ஒரு விதி செய்வோம் வா தோழனே!!


மாமனிதர் அஷ்ரப் அவர்கள் எதனைக் கண்டு
பொருமி விம்மி வெடித்து விடிவை நோக்கி அடியெடுத்து வைத்தாரோ அதே காலப்பகுதியை ஒரு தலைமுறையின் முப்பதாண்டு முடிவோடு , மீண்டும் தேட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இளைஞர் நாங்கள்

இருந்துகொண்டிருக்கின்றோம்."ஓரத்தில் நின்று கொண்டு ஓயாமல் தர்க்கம் செய்யும் வீரத்துக்கு இன்றே வையுங்கள் முற்றிப்புள்ளி "என்றார் பெருந்தலைவர். ஆனால் நாமின்று

நமது வீரத்தையெல்லாம் விரல்களுக்குள் உலாவரும் செல்லிடப் பேசிகளின் விரல் நுனிகளுக்குள் அடகு வைத்துத்தானே உலா
வருகின்றோம். எப்போதாவது சிந்திக்கக்

கடமைப்பட்டோமா?அவ்வாறான சிந்தனையின் கனதியை நமது தலையிலும் மார்பிலும் சுமக்கவிடாது ஒரு முஸ்லிம்
கட்சியின் பால் சுமக்கவிட்டுச் சுகமாகத் தூங்குகிறான் மாதலைவன்.
அவன் விட்டுச் சென்ற இடத்தை
தொட்டுச் செல்ல எட்டுத்தொடும் இரு

தசாப்த்தங்களிலும் எவரும் வாய்க்கவில்லை என்பதே உண்மை.எத்தனை பிளவுகள் ,பிரிவுகள் ,பின்னல்கள், பின்னல்களின் பின்னால் கோடிகளும் சீடிகளும் என்று எமது
முஸ்லிம் அரசியலின் ஒற்றுமை ஒட்டு
மொத்தமாய் வாய்ப்பேச்சளவில் மாறி

தாசியின் கட்டில் சுகத்தில் மரத்துக் கிடப்பதைப் பார் என் நண்பனே!இதனால் என்னவோ மாதலைவன் என்றோ
ஒரு நாள் "இந்தக் கட்சி பாதைவிலகும்
போது அதனை இளையவர்கள்
மீட்டெடுப்பர்" என நம்மையெல்லாம் நம்பி
ஒசியத்தாக சொல்லி மறைந்ததை

யாரோ ஒருவர் சொல்லக்கேட்டது என்
செவிப்பறைகளில் கணீரென ஒலிப்பதனை என்னால் உணரமுடிகிறது.

நீயும் உணர வேண்டும் நட்பே.
உணர்ந்தால் மாத்திரமே நம் மாதலைவன்
கனாக்கண்ட இளைஞனாய் நீயும் நானும்
மாறமுடியும்.இந்த மீட்புப் போராட்டம் மாற்றம் ஒன்றின் தேடுதலாகவும் இரு தசாப்த அரசியலை தன்னகத்தே பதிக்கிக்
கொண்டு உல்லாசமாகவும் ஒய்யாரமாகவும் அவ்வப்போது எலும்புத்துண்டுகளுக்கும் ஊனச் சதைப்பிண்டங்களுக்கும் ஊளையிட்டு

வாலாட்டி சமுகத்தின் தன்மானத்தை அடகு வைத்த ஓநாய்களின் கட்டமைப்பை
மாற்றுவதாய் அமைந்திடவே இளையவர்
நாம் கட்டாகத் திகழவேண்டும்.

நாம் கட்சிப்போக்கிலே கசந்து மாற்று
அணியொன்றின்மீது மையல் கொண்டு
இடை நடுவில் சென்றிருந்தாலும் தாய்க்கட்சி என்பது மாதலைவனால் உருவாகப் பட்டதொன்றே. அன்று எம் தாய்மார் 

நோன்பு நோற்று, தந்தைமார் காவலிருந்து, சகோதர சகோதரிகள் உயிர் துறந்து வளர்த்தெடுத்த கட்சி இன்று உரிமை எனும் பேரில்
ஊமையாகவும் ,காப்பெனும் பேரில் ஆப்பாகவும், கம்பனியாகவும் மாறி
கட்டுக் கோப்புகள் களைந்து வெறுமினே வேடம் பூண்டு வேண்டாப் பிண்டமாக மாறிவருகிறது.

காலவோட்ட வேகத்தில் எமது காதுகள்
கேட்டவற்றையும், கண்கள் கண்டவற்றையும் மறந்துவிடுகின்ற நிலை தான் இந்த ஈரெட்டு வருட அரசியலில் தலைமை வேஷம்
தரித்தவர்களின் வாய்ப்பாகும்.(strength )

நாம் பொங்கியெளுந்து தட்டிக் கேட்க முனைகின்ற போது கூட்டுக்களவாணிகள் அற்ப சுகத்துக்காய் நம்மைத் தட்டிவிடுவதைப்பார். இருந்த்திட்ட போதும் நாளைய நமது சந்ததியின் மானம் "கூத்திகளுன் கூடியவர்களை
தலைவர்களாகக் கொண்டவர் பரம்பரை

"எனும் பழி சொல்லுக்கும் இழிசொல்லுக்கும் ஆளாக முன்னர் சரித்திரம் ஒன்றைப் பதிவு செய்த வேண்டிய கட்டாயத்தில் நாம்
இருப்பதனை உணர்ந்துகொண்டு அவர்களின் வாய்ப்புகளைத் தகர்த்து இனி ஒரு விதி செய்வோம் வா தோழனே..!

Shifaan Bm
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog