Breaking

Sunday

டொனால்டு டிரம்புக்கு முதல் அடி! டிரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் அதிரடி தடை.....!


அமெரிக்காவில் புகலிடம் கோரி வரும் 7 நாடுகளை சேர்ந்த அகதிகளை அமெரிக்காவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற டிரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.

சிரியா, ஈராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்த அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை என ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ரகசிய தடை விதித்திருந்தார்.

இதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது மட்டுமல்லாமல் இதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மேலும் டிரம்பின் அறிவிப்புக்கு பிறகு, இந்த ஏழு நாடுகளில் இருந்து அமெரிக்கா வந்த 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து இதுதொடர்பாக சில அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் டிரம்ப்பின் முடிவுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.

மேலும், அகதிகளை சொந்த நாட்டுக்கு திரும்பி அனுப்பக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog