24மணிநேரமும் ஒரோ நேரத்தை காட்டும் அதிசய மணிக்கூட்டு கோபுரம்-ஓட்டமாவடியில்


(எம்.ரீ.எம்.பாரிஸ்)
மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குற்பட்ட கொழும்பு பிரதான வீதியின் ஓட்டமாவடி பாலத்துக்கு முன்பாக அமைத்துள்ள மணிக்கூட்டு கோபுரம் அதன் சுற்று வட்ட பகுதி கவனிப்பார் அற்ற நிலையில் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

நல்லாட்சி அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் 2மில்லியன் ரூபாய் செலவில் ஓட்டமாவடி பிரதேச அழகு படுத்தல் வேலைத்திட்டமாக மேற்கொள்ளப்பட்ட ஓட்டமாவடி பாலத்துக்கு முன்பாக அமைத்துள்ள மணிக்கூட்டு கோபுரம் பல மாதகாலமாக செயல் இழந்து காணப்படுவதுடன் இருபத்திநாலு மணிநேரமும் ஒரோ நேரத்தை காட்டும் அதிசய மணிக்கூட்டு கோபுரமாக காட்சியளிக்கின்றது.

மணிக்கூட்டு கோபுரமும் அது அமைத்துள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீர்ரூற்று தடாகம் டெங்கு நுளம்பு பரவும் விதத்திலும் ஏனைய பகுதிகளில் மிருகங்களின் மண்டை ஓடு ,எழும்புகள் உள்ளிட்ட எச்சங்கள் காணப்படுவதுடன் இவ்விடம் 

ஓட்டமாவடி பிரதேச சபையின் உரிய பராமறிப்பு இல்லாமையினால் பற்றைகாடுகள் வளர்த்து வருவதுடன் கால் நடைகளின் மேச்சல் தரையாக மாறியுள்ளது இதனால் பொதுமக்களுக்கு எவ்வித பயனையும் அளிக்காத இடமாகவும் மாறி வருவதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.Share on Google Plus
முக்கிய குறிப்பு: சம்மாந்துறை நியூஸ் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு சம்மாந்துறை நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@sammanthurainews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments :

Post a Comment