பொறியியலாளர் ஷிப்லி பாறக்கின் முயற்சியினால் புதிய ஆரம்பப் பாடசாலை உருவாக்கம்..


கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் முயற்சியினால் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினூடாக புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள காத்தான்குடி தாருஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையின் முதலாம் தரத்திற்கான புதிய மாணவர் வரவேற்பு நிகழ்வு 2017.01.11ஆந்திகதி - புதன்கிழமை தாருஸ்ஸலாம் பாடசாலையில் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் முனீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கலந்து கொண்டதோடு பாடசாலை ஆசிரியர், அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.  

காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் அதிக மாணவர்கள் சுமை காரணமாக புதிய மாணவர்களை சேர்ப்பதிலுள்ள சிரமம் மற்றும் மாணவர்கள் தூர இடங்களுக்கு சென்று கல்வி கற்பதால் ஏற்படும் அசௌகரியங்கள் என்பவற்றை தவிர்க்கும் நோக்கில் மக்களின் வேண்டுகோளிற்கமைவாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் முழு முயற்சியினால் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்பாடசாலையானது காத்தான்குடி தீன் வீதியிலுள்ள பகுதி ஒன்றில் இவ்வருடம் தொடக்கம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இப்பாடசாலைக்கான நிரந்தர கட்டடங்கள் அமைக்கப்படும் வரை தற்போது இப்பாடசாலையானது அப்பிரதேசத்திலுள்ள தற்காலிக கட்டடம் ஒன்றில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: சம்மாந்துறை நியூஸ் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு சம்மாந்துறை நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@sammanthurainews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments :

Post a Comment