Breaking

Wednesday

குடிநீர் கட்டண அதிகரிப்பு நிறுத்தம் ...!


by-ரெ.கிறிஸ்­ணகாந்

30 சதவீத குடிநீர் கட்­டண அதி­க­ரிப்பு எதிர்­வரும் டிசம்பர் 1 ஆம் திக­தி­யி­லி­ருந்து அமு­லுக்கு வர­வி­ருந்த நிலையில் அது நிறுத்­தப்­பட்­டுள்­ள­தாக அமைச்சர் சந்­திம வீரக்­கொடி தெரி­வித்­துள்ளார்.

குடி­நீர்­கட்­டணம் அதி­க­ரிக்­கப்­ப­ட­மாட்­டாது என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று அமைச்­ச­ர­வையில் தெரி­வித்­த­தாக அமைச்சர் இதன்­போது தெரி­வித்தார்.

இதே­வேளை, குடி­நீர்­கட்­டண திருத்தம் தொடர்­பாக ஆராய்­வ­தற்கு மூன்று அமைச்­சர்கள் அமைச்­சர்கள் அடங்­கிய குழு­வொன்றை அமைப்­ப­தற்கு அமைச்­ச­ர­வையில் தீர்­மா­னிக்­கப்­பட்­ட­தாக நீர்­வ­ழங்கள் வடி­கா­ல­மைப்பு அமைச்சர்  ரவூப் ஹக்கீம் தெரி­வித்­துள்ளார்.

டிசம்பர் 1 ஆம் திகதி முதல் நீர்­கட்­டணம் 30 வீதத்­தினால் அதி­க­ரிப்­ப­தாக நீர்­வ­ழங்கல் வடி­கா­ல­மைப்பு சபை தெரி­வித்­தி­ருந்த போதிலும் அது தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog