Breaking

Wednesday

666 என்பது சாத்தான் எண்...மறைந்திருக்கும் மர்மங்கள்.


பண்டைய காலத்திலிருந்தே பல எண்களுக்கு பல விதமான குறியீடுகள் சொல்லப்பட்டு வருகின்றன.

அதில் முக்கியமாக 666 என்ற மூன்றிலக்கு எண் பற்றி பல விதமாக பேசப்பட்டு வருகிறது. அதில் முக்கியாக 666 என்பது சாத்தான் எண் என கூறப்படுவதுண்டு.

மறைந்திருக்கும் உண்மைகளை கூறும் Revelation புத்தகத்தில் 666 என்பது மிருகம் என்ற சொல்லை குறிப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

அதில், இரண்டாவது பிறக்கும் மிருகமானது முதல் மிருகத்துக்கு மூச்சு சக்தியை கொடுக்கிறது.

அந்த சக்தியானது எப்பேற்பட்ட பணக்காரனோ, ஏழையோ, பெரியவரோ, சிறியவரோ அவர்கள் நெற்றியிலோ அல்லது வலது கையிலோ பிற்காலத்தில் 666 என்ற எண் இருக்கும். அதன் மூலம் எல்லோரும் ஞானமும், அறிவும் அடைவார்கள் என கூறப்பட்டுள்ளது.

666 என்பதற்கு சாத்தான் என அர்த்தம் என இதில் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை என்பது கவனிக்க வேண்டிய முக்கிய விடயமாகும்.

அதே போல கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளில் 666 என்ற எண் மனிதனுடன் தொடர்புடையது என கூறப்பட்டுள்ளது.

அதாவது, மிருக கடவுளின் அதிகாரத்தை எதிர்க்கும் சக்திகள் கொண்ட மனித கடவுள் அதிகாரம் நிலைக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

கிரேக்க நாடுகளின் பைபிளில் இந்த 666 எண்களை முன்னர் 616 என குறிப்பிடுவார்கள்.

எவ்வளவு புத்தகத்தில் 666 எண் பற்றி இருந்தாலும், அதற்கு உண்மையான மற்றும் சரியான அர்த்தம் யாருக்கும் தெரியாது என்பதே யதார்த்தம் ஆகும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog