Breaking

Tuesday

நியூ­ஸி­லாந்து பூகம்­பத்தால் நிர்க்­க­தி­யான மாடுகள்


நியூ­ஸி­லாந்தில் நேற்­று­ முன்­தினம் ஏற்­பட்ட பாரிய பூகம்­பத்­தை­ய­டுத்து, 3 மாடுகள் சிறிய பரப்­ப­ள­வி­லான மண் மேடு ஒன்றில் நிர்க்­க­தி­யாக நின்­று­கொண்­டி­ருந்­தன.

நியூ­ஸி­லாந்தின் தென் தீவில் நேற்­று ­முன்­தினம் 7.8 ரிச்டர் அள­வி­லான பூகம்பம் ஏற்­பட்­டது. இதை­ய­டுத்து, பாரிய மண்­ச­ரி­வு­களும் ஏற்­பட்­டன. இந்­நி­லையில், கய்­கோரா எனும் சிறிய நக­ருக்கு அருகில் 3 மாடுகள் மேய்ச்­சலில் ஈடு­பட்­டி­ருந்­த­போது அம்­ மா­டு­களைச் சுற்­றி­யி­ருந்த நிலப்­ப­குதி சரிந்து வீழ்ந்­தது.

இதனால், சிறிய குன்று போன்ற பகு­தியில் அம் ­மா­டுகள் நிர்க்­க­தி­யாக இருந்­தமை ஹெலி­கொப்­ட­ரி­லி­ருந்து படம்­ பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இம் ­மா­டு­களின் உரி­மை­யாளர் தொடர்­பான விப­ரங்­களோ இம்­ மா­டு­க­ளுக்கு எவ்­வாறு உத­விகள் வழங்­கப்­பட்­டன என்­பது தொடர்­பான விப­ரங்­களோ உட­ன­டி­யாகத் தெரிய வரவில்லை.

கய்கோரா நகருக்கு அருகிலேயே மேற்படி பூகம்பம் மையம் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog