Breaking

Monday

இதை நீங்கள் படிக்க மாட்டீர்களா..? படித்தால், சிந்திக்க மாட்டீர்களா..?

கடமையான ஐந்து நேர தொழுகை என்பது நமக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையிலும் ஐந்து நிமிடங்களை ஒதுக்கி நம்மால் தொழுது விட முடியும். ஆனால் நம்மில் பலர் இந்த ஐந்து நேர தொழுகைகளில் மிகவும் அலட்சியமாக இருக்கிறோம். எதற்கும் உதவாத சினிமாவுக்கு 3 மணி நேரத்தை ஒதுக்க நமக்கு நேரமிருக்கிறது. ஆனால் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்த நமக்கு ஒரு நாளையில் அரை மணி நேரத்தை ஒதுக்க முடியவில்லை.
அல்லாஹ்வின் மீது பயபக்தி உள்ளவர்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ் நம்மை பார்கின்றான் என்று அஞ்சி தொழுகையை விடமாட்டார்கள். அதுமட்டுமின்றி பலர் மலை உச்சத்தில் இருந்தாலும், கடலில் இருந்தலும், வீதியாக இருந்தாலும் தொழுகை நேரம் வந்தவுடன் தொழுதுவிடுவார்கள்.
நாம் என்ன, அவர்களை போல மலை உச்சத்திலும், கடலிலும், வீதிகளிலுமாய் தொழ போகிறோம்..? நீங்கள் யாரும் அவர்களை போல தொழப்போவதுமில்லை. நமக்கு அல்லாஹ்வின் வீடு இருக்கின்றது. அதுவும் நமதூரில் எக்கெச்செக்கமான பள்ளிவாசல்கள் உள்ளது. எங்கு சென்றாலும் பாங்கு சப்தம் கேட்டுக்கொண்டும் இருக்கிறது.
கை, கால் குறைப்பாட்டில் இருப்பவர்கள் பாங்கு சப்தம் கேட்டவுடன் தவழ்ந்து தவழ்ந்து பள்ளிவாசலுக்கு வருவதையும் நாம் எல்லோரும் பார்த்துருக்கின்றோம். நமக்கு அல்லாஹ் இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும் எந்த ஒரு குறைப்பாடுமின்றி தந்துள்ளான். அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நாம் எப்போது செய்யபபோகிறோம். அந்த இஸ்லாமியரின் பொறுப்பும் நமக்கு எப்போது வரப் போகிறது…?
உள்ளச்சம் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். இன்னும், அவர்கள் வீணான பேச்சு, செயல் ஆகியவற்றை விட்டு விலகியிருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளைக் குறித்த காலத்தில் முறையோடு பேணுவார்கள்.
-இர்ஷாத் பின் ஜஹஃபர் அலி (இஸ்லாமியன்)
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog