Breaking

Wednesday

ஆபத்தான கட்டத்தில் ரணில்! அர்ஜுன் மகேந்திரனை கைது செய்ய திட்டம்


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மைத்திரி தரப்பினரின் தேவைக்காக, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திறைசேரி முறி மோசடி தொடர்பில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் மீது, குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையினால் அதன் குற்றச்சாட்டுகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.

அதில் இருந்து பிரதமரை காப்பாற்றிக் கொள்வதற்கும், சுதந்திர கட்சிக்கு அதிகாரம் உள்ளதாக காட்டுவதற்கும், முன்னாள் மத்திய வங்கி ஆளுநரை கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் கைது செய்யப்படுவதனை இறுதியில் சட்டப்பிரச்சினைக்கமைய தடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அர்ஜுன் மகேந்திரன் இந்த நாட்டு குடிமகன் இல்லாதவர் என்பதால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாதென கூறுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog