Breaking

Saturday

சம்மாந்துறை மக்களின் கவனத்துக்கும். ....! சமூக சேவை அமைப்புகளின் கவனத்துக்கும்.


ஒரு ஏழையின் வீட்டில் மரணம் நிகழ்ந்துவிட்டால்,என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணீருடன் அலைகின்றார்கள்

ஜனாஸாவைக் காண வருபவர்கள் வெயிலுக்கோ,மழைக்கோ அமர்ந்திருக்கும் நிலைக்கு ஆள்கின்றர்கள்.
கூடாரம் (டென்ட்) கட்டவென்று குறைந்தது 10ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாவாவது செலவாகிறது..!!

(ஒரு மரண வீட்டில் இவை மாத்திரமல்ல பல  செலவுகள்..)
என்றாலும் கண்டிப்பாகச் இவைகளை செய்தே ஆகவேண்டிய கட்டாயம். இவற்றைச் செய்து  கொள்ள முடியாமல் பல ஏழைகள் கஷ்டப்படுகின்றனர் 

எனவே ஒவ்வொரு பள்ளியிலும் ஜனாஸாவைத் தூக்கிச்செல்ல
“சந்தூக்கு” வைத்திருப்பது போல,ஒவ்வொரு மஹல்லாவிலும் உள்ள வசதி படைத்தவர்கள் ஒன்றிணைந்து தத்தமது ஊர் பள்ளிகளில், கூடாரம்,’கபன்’துணி போன்றவற்றை வாங்கிவைத்து
இலவச சேவையொன்றைச் செய்தாலென்ன ?

இந்த கோரிக்கையை உங்களின் ஜாமத்தில் முன்வையுங்கள்...
இன்ஷா அல்லாஹ் பல ஏழை ஏழியோரின் சுமையில் நாமும் பங்கொடுத்து கொள்வோம்..

ஜஸாஹல்லாஹ் ஹைர்
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog