சம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. ?


அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது.


இரவுவேளைகளில் வீடுகளுக்குள் புகும் இனந்தெரியாத கோஷ்டியினரின் செயற்பாடே இவ்வச்சத்திற்கு காரணமெனக்கூறப்படுகின்றது.

ஒரு சில இடங்களைத்தவிர, மற்றைய இடங்களில் ஒன்றையுமே திருடாமல் பயத்தை ஏற்படுத்திச்சென்றுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு ஆவாக்குழு காரணமா அல்லது கிறீஸ் மனிதன் போன்ற மற்றுமொரு குழுவினர் காரணமா? என பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர்.

ஒருசில வீடுகளில் தங்கச்சங்கிலி, பணம் போன்றவை திருடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

நேற்றிரவு நிந்தவூர் 11ஆம் பிரிவிலுள்ள றிஸ்வான் என்பவரின் வீட்டின் இரவு 8மணியளவில் கூரைமேல் ஏறி பிளாஸ்ரிக் சீலையிலான அண்டர் சீற்றை வாளால் துளையிட்ட நபரை அவ்வீட்டுப் பெண்மணிகண்டு ஓலமிட, குறித்த நபர் தப்பிஓடியுள்ளார். மழைநேரமாகையால் மக்கள் யாரும் வெளியேவரவில்லை.

அதே பிரிவில் றிசாட் என்பவரின் வீட்டிலுள்ள யன்னலை நள்ளிரவு 11மணியளவில் அலவாங்கிட்டு பெயர்த்தெடுத்து உள்நுழைந்துள்ளனர். அங்கு வீட்டுக்காரர் விழித்தெழ அவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

பள்ளிவாசல்களில் இதுதொடர்பில் அறிவித்து வீதிகளிலும், வீடுகளிலும் மின்விளக்கை எரியவிடுமாறு கோரியுள்ளதுடன் பொலிசாரிடமும் குறித்த விடயம் தொடர்பில் கூறியுள்ளனர்.
எனினும் இரவு நேர இச்செயற்பாடு தொடர்ந்து வருகின்றமையால் மக்கள் அச்சத்திலும் பீதியிலும் உள்ளனர்.

By-V.T.Sahadevarajah
Share on Google Plus
முக்கிய குறிப்பு: சம்மாந்துறை நியூஸ் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு சம்மாந்துறை நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@sammanthurainews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments :

Post a Comment