Breaking

Monday

முன்னாள் இராணுவ வீரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்..!ரணகளமாக மாறுமா கொழும்பு.


உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள அங்கவீனமுற்றுள்ள படைவீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முற்றபட்ட காரணத்தினாலேயே பொலிஸாரால் இந்த தீர்மானத்தை முன்னெடுத்துள்ளார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தேச ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்க கோரியே இவர்கள் இந்த பேராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களது போராட்டத்திற்கு நாட்டிலுள்ள பலர் ஆதரவு தெரிவித்ததுடன் கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் பிக்குகள் நேரில் சென்று பார்வையிட்டதுடன், அவர்கள் மீது கைவைத்தால் நாடு பாரிய விளைவுகளை காண நேரிடும் என எச்சரிக்கை விட்டிருந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப் போல் மாறியுள்ளதோடு, எச்சரிக்கை விடுத்தவர்களின் பதிலடி எப்படி இருக்கப்போகின்றது என்பது அனைவர் மத்தியிலும் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது.

இதனால் கொழும்பு காலிமுகத்திடல் லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக கடுமையான வாகன நெரிசல் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog