Breaking

Tuesday

சம்மாந்துறையில் வறுமைக் கோட்டின் கீழுள்ள குடும்பங்களுக்கு சீமெந்து பக்கெட்டுகள் இலவசமாக பகிர்ந்தளிப்பு...!


கடந்த எட்டு வருடகாலமாக சம்மாந்துறைக்கான பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இன்மையால் பல்வேறு துறைகளில் சம்மாந்துறை மண் அபிவிருத்தியில் பின்னடைந்து காணப்படுகின்றது.

அதனை அபிவிருத்தியில் செழிப்புள்ள நகரமாக மாற்றுவதே எனது தலையாய பணியாகும். அதற்கு அரசியல் வேறுபாடுகளின்றி அணைத்து மக்களும் என்னோடு இணைய வேண்டும்.
மன்சூர் எம்.பி. வேண்டுகோள்

சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்ட 51 கிராம சேவை அலுவலகர் பிரிவுகளில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள 90 குடும்பங்களுக்கு பூரணப்படுத்தப்படாத வீட்டு வேலைகளை  பூரணப்படுத்தும் நோக்கில் மானிய அடைப்படையில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் ஊடாக இந்த சீமெந்து

பக்கெட்டுகள் இலவசமாக பகிர்ந்தளிக்கும் நிகழ்வு நேற்று சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் இடம்பெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் குடும்பம் ஒன்றுக்கு 10சீமெந்துப் பக்கெட்டுகள் படி சுமார் 9இலட்சம் ரூபாய் பெறுமதியான 900பக்கெட்டுக்கள் வழங்கப்பட்டன.

By:-Ansar Cassim
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog