Breaking

Sunday

வடகிழக்கு இணைப்பிற்கு சம்மதம்-சேகு இஸ்ஸதீன்.


வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு முழு சம்மதம் என மேடைகள் போட்டு பிரச்சாரம் செய்கிறார் முன்னாள் வடகிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சேகு இஸ்ஸதீன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்பதை போல வடக்கையும் கிழக்கையும் இணைத்து கொடுக்க முடியும் அப்படியெனில் முஸ்லிம்களுக்கு என்ன தீர்வு? தமிழ் பேசும் தமிழ் – முஸ்லிம்கள் சேர்ந்து இருப்பது நன்று ஆனால் அவர்களின் அதிகாரம்? சம்ஷ்டி? தீர்வு? இவைகள் பற்றி உங்களால் பதில் தரமுடியுமா? அந்தப்பதிலை தருவீர்களாயின் இணைப்பிற்கு முழு சம்மதம்.

அந்த தீர்வு குறித்து எங்களுக்கும் பேச அருகதையுண்டு, தீர்வு பற்றிய முன்மொழிவுகளை நாங்கள் உங்களுக்கு ஆலோசனை தரமுடியும். அந்த ஆலோசனையின் சிறு அங்கங்கள் கீழே தரப்படுகிறது.

இணைந்த வடகிழக்கில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம்களுக்கான அதிகார அலகு

அதிகாரம் முஸ்லிம்கள் கையில் வழங்கப்படுதல், காணி இலாகாவிற்கு முஸ்லிம் அதிகாரிகள், பொலிஸ் இலாகாவிற்கு முஸ்லிம் பொலிஸ் அதிகாரிகள், அதிகார அலகிற்கு முஸ்லிம் முதலமைச்சர் என இது தொடர்பில் எம்மிடம் முக்கிய ஆவணமும் உள்ளது

இவ்வாறு நீங்கள் தருவீர்களாயின் வடகிழக்கை இன்றும் நீங்கள் இணைக்கலாம். எவ்வாறும் இணைப்பது உறுதி என்பதை எங்களால் உணர முடிகிறது. முஸ்லிம்களின் பிரதிநிதியாக நீங்கள் அமைச்சர் ஹ்க்கீமை மாத்திரம் நினைக்க முடியாது காரணம் அவர் தவிர முஸ்லிம்கள் மீது பற்றுள்ள அது பற்றி சிந்திக்ககூடிய தலைமைகள் அதிமதிகம் வடகிழக்கில் வாழ்கின்றனர் என்றார் 
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog