Breaking

Friday

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் 32 இலங்கையர்கள்..!நீதி அமைச்சர்.


இலங்கையை சேர்ந்த 4 குடும்பங்களின் 32 பேர் சிரியாவுக்கு சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைந்து கொண்டமை தொடர்பில் தகவல் இருப்பதாக நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கையில் மதவாத அடிப்படைவாத செயல்களுக்கு இடமில்லை.

சில இணையத்தளங்கள் வழியாக பொய் பிரச்சாரங்கள் வெளியிடப்படுகின்றன. இவற்றின் மூலம் மக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.

இவ்வாறு நீதித்துறைக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்தும் செய்திகளை வெளியிட்டு வரும் லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் சந்தருவான் சேனாதீர போன்றவர்கள் சர்வதேச பொலிஸாரின் ஊடாக கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இலங்கையில் சில வெளிநாட்டு புலனாய்வு சேவைகளும் செயற்பட்டு வருவதாகவும் விஜயதாச ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog