Breaking

Tuesday

பொது சிவில் சட்டத்திற்கு எதிராக பேசுபவர்கள் தேசத்திற்கு எதிரானவர்கள் ..!


பொது சிவில் சட்டத்திற்கு எதிராக பேசுபவர்கள் தேசத்திற்கு எதிரானவர்கள் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பொது சிவில் சட்டத்திற்கு இஸ்லாமியர்கள் மத்தியிலும், தலித்துகள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா “பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பவர்கள் இந்திய தேசத்திற்கு எதிரானவர்கள் என்றும் மேலும் பொது சிவில் சட்டத்தை இஸ்லாமியர்கள் யாரும் எதிர்க்கவில்லை என்றும் சில இயக்கங்கள் தான் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர், அவ்வாறு பொது சிவில் சட்டத்திற்கு எதிராக பேசுபவர்கள் தேச விரோத சக்திகள்” என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog