Breaking

Monday

இனவாதத்தை கக்கும் தயா கமகே....வீடியோ இணைப்பு.


"பொத்துவிலிலிருந்து கல்முனை வரைக்குமான 12000 ஏக்கர் நிலம் தீகவாபிக்கு சொந்தமானது"
இன்று அம்பாறை கச்சேரியில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்தில், இறக்காமம் மாணிக்கமடு பிரதேசத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அவர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் தயாகமகே மேற்சொன்னவாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அமைச்சர் தயாகமகே கூறுகையில் "பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் உதுமான் லெப்பை அவர்களும் இறக்காமம் மாணிக்கமடு பிரதேசத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பாக விவாதிக்கும் வரைக்கும் எமக்கே அதுபற்றி எதுவும் தெரியாதிருக்கின்றது.
ஆனால் எல்லோரும் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். இலங்கையின் அரசியல் அமைப்பிலேயே பௌத்த சமயத்திற்கே பிரதான இடம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி நாடு பூராவும், ஒவ்வொரு நாளும் 100, 200 புத்தர் சிலைகளை வைத்து விடுகின்றார்கள். இவ்வாறு சிலைகளை வைப்பதற்கு எவருடைய அனுமதியும் தேவையில்லை.
பொத்துவிலிலிருந்து கல்முனை வரைக்குமான 12000 ஏக்கர் நிலம் தீகவாபி புனித பிரதேசத்திற்கு சொந்தமானது. அவ்வாறு பொத்துவிலிலிருந்து நிலத்தை தோண்டிக்கொண்டு போனால் புத்த சிலைகள் வந்து கொண்டே இருக்கும்.
அவ்வாறு தான் பாகிஸ்தானிலும் புத்தர் சிலைகள் தாராளமாக காணப்படுகின்றது. அதனை பாகிஸ்தான் முஸ்லிம் மக்கள் பாதுகாத்து வருகின்றனர்" எனவும் அமைச்சர் தயாகமகே தெரிவித்தார்.
மூத்த போராளி"


செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog