Breaking

Friday

கொழும்பு மற்றும் அண்டிய பிரதேசங்களில் நாளை 12 மணிநேர நீர் விநியோகத் தடை ..!


(ரெ.கிருஷ்­ணகாந்)

கொழும்பு மற்றும் அதனைச் சூழ­வுள்ள பிர­தே­சங்கள் சில­வற்றில் நாளை சனிக்­கி­ழமை  12 மணித்­தி­யா­லங்கள் நீர்­வெட்­டினை   மேற்­கொள்­ள­வுள்­ள­தாக நீர்­வ­ழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்பு சபை தெரி­வித்­துள்­ளது.

தெஹி­வளை, கல்­கிஸை, இரத்­ம­லானை, கோட்டே, கடு­வலை    மாந­க­ர­ச­பைக்­குட்ட பிர­தேசம், மஹ­ர­கம, பொர­லஸ்­க­முவ, கொடி­கா­வத்தை, கொலன்­னாவை மற்றும் முல்­லே­ரியா ஆகிய நக­ர­ச­பைக்­குட்­பட்ட பிர­தேசம் ஆகிய பிர­தே­சங்­க­ளுக்கு இவ்­வாறு நீர் விநி­யோக தடை ஏற்­படும்.

நாளை காலை 9 மணி தொடக்கம்  இரவு 9 மணி­வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீhவ­ழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்பு சபை தெரி­வித்­துள்­ளது.

அம்­பத்­தலை நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்­துக்­கான மின்­சார விநி­யோக கட்­ட­மைப்பில் திருத்தப் பணிகள் இடம்பெறவுளள்தால் இந்த நீர் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog